ரஜினியின் கபாலி – 50 ருசிகர தகவல்கள்

201607221545263999_Kabali-film-Rajinikanth_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று காலை வெளியானது. அப்படம் தொடர்பான பல்வேறு ருசிகர தகவல்கள் வெளியாகியுள்ளது. அவை வருமாறு:-

1. கபாலி திரைப்படம் ரஜினி காந்துக்கு 159-வது படமாகும்.

2. உலகம் முழுவதும் 12 ஆயிரம் தியேட்டர்களில் கபாலி திரையிடப்பட்டுள்ளது.

3. சீனாவில் மட்டும் 3 ஆயிரம் தியேட்டர்களில் கபாலி திரையிடப்பட்டுள்ளது. தமிழ் படம் ஒன்று சீனாவில் இந்த அளவுக்கு திரையிடப்பட்டு இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

4. கபாலி படம் முதலில் நேற்று அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இன்று உலகின் மற்ற பகுதிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

5. கபாலி படத்தின் முதல் விமர்சனம் நேற்று பேஸ்புக்-கில் வெளியானது.

6. கபாலி படம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள பேஸ்புக், டுவிட்டரில் அதிக தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக பேஸ்புக்கில் அதிகம் தேடப்படுவதாக கபாலி உள்ளது.

7. பேஸ்புக்கில் கபாலி விமர்சனம் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அதை 30 ஆயிரம் பேர் பார்த்தனர்.

8. கபாலி படம் சைனீஸ், மலாய், ஜப்பானிஸ் மொழிகளிலும் மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

9. அமெரிக்கா, சீனா உள்பட திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கபாலி பட டிக்கெட் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது.

10. அமெரிக்காவில் கபாலி படம் முன்பதிவில் புதிய சாதனை படைத்துள்ளது. எந்த ஒரு இந்திய படத்துக்கும் இந்த பெருமை இதுவரை கிடைத்தது இல்லை.

11. இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி படம்தான் திரையிடப்படுவதற்கு முன்பு ரூ. 162 கோடி வருவாயுடன் சாதனை படைத்திருக்கிறது. ஆனால் கபாலி படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 223 கோடி வருவாய் ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.

12. கபாலி படம் வட இந்தியாவில் 5 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.

13. கபாலி பட டீசரை யூ-டியூப்பில் 2½ கோடி பேர் பார்த்தனர். இதுவும் புதிய சாதனையாகும்.

14. பிரான்சு நாட்டில் உள்ள கிராண்ட் பிரிக்ஸ் அரங்கில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற சிறப்பை கபாலி பெற்றுள்ளது.

15. கபாலி படம் ரூ. 500 கோடிக்கு மேல் டிக்கெட் வருவாயை பெற்றுத் தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

16. கபாலி படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை 4 மணிக்கு காண்பிக்கப்பட்டது. இதற்காக நள்ளிரவு 12 மணி முதல் ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

17. சினிமா படத்துக்கான அதிகபட்ச கட்டணமாக ரூ.120ஐ தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் பிளாக் மார்க்கெட்டில் ரூ. 1500 வரை கபாலி டிக்கெட் விற்றது.

18. முதல் நாள், முதல் காட்சியை பார்த்து விட வேண்டும் என்று கபாலி திரையிடப்பட்ட தியேட்டர்களை ரசிகர்கள் சுற்றி, சுற்றி வந்தனர். எத்தனை ஆயிரம் ரூபாயினும் கொடுக்க ரசிகர்கள் தயாராக இருந்தனர்.

19. கபாலி படத்துக்கு டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்வதில் ரஜினி ரசிகர் மன்றங்கள் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இதனால் சில தியேட்டர்களில் திங்கட்கிழமை வரை அனைத்து ஷோக்களும் ரசிகர் மன்றத்தால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

20. கபாலி படம் முதல் 3 நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டும் என்று தெரிய வந்துள்ளது.

21. வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ராஜேஸ்வரி தியேட்டரில் முதல் 20 நிமிடங்களில் 6754 கபாலி பட டிக்கெட் விற்பனையானது. இது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது.

22. சமூக வலைத்தளங்களில் கபாலி படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து லட்சக்கணக்கான பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு இந்திய படத்துக்கும் இப்படி வாழ்த்துக்கள் குவிந்தது இல்லை.

23. கபாலி படம் பார்க்க சென்னையில் உள்ள பல நிறுவனங்கள் விடுமுறை அளித்தன. இதற்கு முன்பு எந்த ஒரு படத்துக்கும் இப்படி விடுமுறை அளிக்கப்பட்டதில்லை.

24. கேரளாவில் 306 தியேட்டர்களில் கபாலி வெளியாகி உள்ளது.

25. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 500 தியேட்டர்களில் கபாலி திரையிடப்பட்டுள்ளது.

26. பெங்களூரில் கபாலி படம் வெளியாகியுள்ள தியேட்டர்களில் தமிழ்நாட்டை மிஞ்சும் வகையில் ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

27. பெங்களூரில் கபாலி டிக்கெட் குறைந்தபட்சம் ரூ. 1300க்கு விற்பனையானது.

28. கபாலி படத்தின் மொத்த தயாரிப்பு செலவு ரூ. 110 கோடி ஆகும். படம் திரையிடப்படும் முன்பே அந்த பணம் வசூலாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

29. கபாலி என்ற பெயரில் நிறைய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

30. ரஜினி ரசிகர்களை கவரும் வகையில் ஒரு பனியன் நிறுவனம் ரஜினி படத்துடன் 5 வகையான பனியன்களை அறிமுகம் செய்துள்ளது.

31. தமிழ்நாட்டில் கபாலி படத்தின் இன்றைய முதல் நாள் வசூல் ரூ. 34 கோடி முதல் ரூ. 40 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

32. கபாலி படத்தின் வசூல் மற்றும் இதர சாதனைகள் ரஜினியின் அனைத்து முந்தைய படங்களின் சாதனைகளையும் முறியடிக்கும் என்று திரை உலக பிரபலங்கள் கூறுகிறார்கள்.

33. கபாலி படத்தின் சில காட்சிகள், படங்கள் முன் கூட்டியே வெளியான போதும் அது கபாலியை பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

34. கபாலி படத்தின் முதல் நாளான இன்று டிக்கெட் கிடைக்காத ரஜினியின் தீவிர ரசிகர்கள் பலர் ஏக்கத்தோடும், ஏமாற்றத்தோடும் தியேட்டர்களுக்கு வெளியில் நின்றதைப் பார்த்த போது பரிதாபமாக இருந்தது.

35. கபாலி படம் பார்க்க தியேட்டருக்கு வந்த ரசிகர்கள் ரஜினி ஸ்டைலில் முடி வெட்டி, கண்ணாடி அணிந்திருந்தனர்.

36. ரஜினியின் தீவிர ரசிகர்கள் ஒரு வாரத்துக்கு தினமும் கபாலி படம் பார்க்க டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

37. கபாலி பட ரஜினி தோற்றத்தில் 2 பெரிய ரஜினி சிலைகளை பெங்களூர் ரசிகர்கள் தயார் செய்துள்ளனர். அதில் ஒரு ரஜினி சிலை பெங்களூர் நடராஜா தியேட்டரிலும் மற்றொன்று ஊர்வசி தியேட்டரிலும் வைக்கப்பட்டுள்ளது.

38. ரஜினி சிறு வயதில் படித்த பெங்களூர் கவிபுரம் கன்னட அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வாரம் கபாலி படம் சிறப்பு காட்சியாக திரையிட்டு காண்பிக்கப்பட உள்ளது.

39. கபாலி பட ரிலீசை முன்னிட்டு மும்பை ரஜினி ரசிகர்கள் இன்று பிரமாண்ட ஊர்வலம் நடத்தினார்கள். ஒரு தியேட்டரில் இலவச கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது.

40. கபாலி படத்தை சென்னையில் பார்க்க வேண்டும் என்பதற்காக யாக்தீஷ்- அனிதா தம்பதிகள் தமிழகம் வந்துள்ளனர்.

41. தமிழக நடிகர்கள் பலர் கபாலி படத்தை முதல் நாள் பார்க்க தங்கள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். ரஜினிக்கு இத்தகைய ஆதரவு கிடைத்து இருப்பது இதுவே முதல் தடவையாகும்.

42. சுகாதார இந்தியா திட்டத்தின்படி சிறப்பாக சேவையாற்றிய 147 குடும்பங்களுக்கு புதுச்சேரி மாநில அரசு கபாலி படம் பார்க்க இலவச டிக்கெட் வழங்கியுள்ளது.

43. கபாலி ஸ்டைலில் பழைய மகாபலிபுரம் சாலையில் ஒரு கடையில் கபாலி பீட்சா விற்பனை செய்யப்படுகிறது.

44. தமிழ் பட வரலாற்றில் புதுமையான முறையில் முதல் முறையாக பறக்கும் விமானத்தில் ரஜினி படத்துடன் கபாலி படம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

45. கபாலி பட ரஜினி ஸ்டைல் காரணமாக சென்னையில் உள்ள பல புகழ் பெற்ற சலூன்கள் கபாலி மாதிரி முடிவெட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

46. கபாலி படத்தின் முக்கிய அம்சங்கள் தொலைக்காட்சி, எப்.எம். ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

47. ரஜினி ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று ரஜினி கட்-அவுட்களுக்கு பல நூறு லிட்டர் பால் அபிஷேகம் செய்தனர்.

48. தமிழ்நாடு முழுவதும் கபாலி திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. அது தீபாவளி பண்டிகையை நினைவுப்படுத்துவது போல இருந்தது.

49. கபாலி பரபரப்பை தொடர்ந்து 24-ந்தேதி ரஜினியை வரவேற்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

50. ரஜினி படத்தை அமைதியாக பார்க்க விரும்புபவர்கள் இன்னும் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries