சென்னை தியேட்டர்களில் கபாலி திருவிழா கோலம்: ரசிகர்கள்-ரசிகைகள் கொண்டாட்டம்

201607221534355353_Kabali-film-release-fans-celebration-in-chennai-theatre_SECVPFரஜினியின் கபாலி படம் இன்று ரிலீசானதையொட்டி தியேட்டர்களில் திருவிழா போல் கொண்டாட்டம் களை கட்டியது. சென்னையில் உள்ள தியேட்டர்களில் அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டனர்.

ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம்- பாட்டத்துடன் கொண்டாடினர். ஆல்பர்ட் தியேட்டரில் பட்டாசு வெடித்து உற்சாகமடைந்த ரசிகர்கள் ரஜினியின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தனர். உயரமான அந்த கட்-அவுட்டில் ஏறி பாலை ஊற்றினர்.

காசி தியேட்டரில் பேண்ட்-வாத்திய முழக்கத்துடன் ரசிகர்கள் நடனமாடினார்கள். அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட முதல் காட்சிகளுக்கு பெண்களும் பெரும் அளவில் வந்து இருந்தனர். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்களும் திரண்டனர். இதனால் சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.

சிலர் ரஜினி கபாலியில் தோன்றிய தோற்றத்தில் படம் பார்க்க வந்து இருந்தனர். ரஜினியின் முகமூடி ரஜினியின் படம் பொறித்த பனியன் அணிந்திருந்தனர். பலர் ரஜினியின் புகைப்படத்துடன் செல்பி எடுத்து கொண்டனர். அதை பேஸ்புக், வாட்ஸ்அப்பில் அனுப்பி தாங்கள் கபாலி படத்தை பார்த்து கொண்டிருக்கிறோம் என்று மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries