கபாலி டிக்கெட் விலை விவகாரம்: சென்னையில் 18 திரையரங்குகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

201607221122284172_kabali-ticket-price-issue-officers-raid-in-chennai-theaters_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நேற்று இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. திரையரங்குகள் முன் பேனர்கள் வைப்பது, மேளம் கொட்டி, பட்டாசுகள் வெடித்து ஒரு திருவிழா போன்று ‘கபாலி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பல தியேட்டர்களில் ‘கபாலி’ படத்தின் டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்கப்பட்டு விட்டதாக கூறிவிட்டு, பிளாக்கில் ரூ.1000, ரூ.2000க்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. ரூ.120-க்கான டிக்கெட் ரூ.2000 வரை விற்பனை செய்வது குறித்து ரசிகர்களை வெறுப்படைய வைத்தது. இதுகுறித்து, சிலர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கபாலி டிக்கெட் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சென்னையில் அபிராமி, ஆல்பர்ட், ஈகா, தேவி, ஏ.ஜி.எஸ். உள்ளிட்ட 18 திரையரங்குகளில் இன்று காலை முதல் விற்பனை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களிடம் டிக்கெட்டுகளை வாங்கி சோதனை செய்த அதிகாரிகள், ரசிகர்களிடம் டிக்கெட்டின் விலை பற்றிய விவரங்களை கேட்டறிந்தனர். தியேட்டர்களில் திடீரென விற்பனை வரித்துறை அதிகாரிகள் நடத்தி சோதனை சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries