கபாலிக்காக அதிகாலையிலேயே தியேட்டரில் குவிந்த நட்சத்திரங்கள்

201607221243110119_Kabali-movie-watch-celebrities-in-theaters_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘கபாலி’ திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று காலை வெளியானது. சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் அதிகாலையிலேயே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பட்டாசுகள் வெடிப்பது என தங்களது தலைவரின் படத்தை வரவேற்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில், சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கிலும், ‘கபாலி’ படத்தின் சிறப்பு காட்சி 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த தியேட்டரில் ‘கபாலி’ படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்கள் சிலரும் அதிகாலையிலேயே குவிந்தனர்.

நடிகர்கள் சித்தார்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் வெற்றி திரையரங்கில் ‘கபாலி’ படத்தை கண்டுகளித்துள்ளனர். மலையாள நடிகர் ஜெயராம் தனது மகன் காளிதாசுடன் காசி திரையரங்களில் ‘கபாலி’ படத்தை முதல் காட்சியை பார்த்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries