ரூ.550 கோடியை குவித்ததன் மூலம் உலகின் மூன்றாவது வசூல் சாதனை படமாக சுல்தான் உயர்ந்தது

201607251742361349_Sultan-grosses-Rs-550-cr-worldwide-becomes-3rd-highest_SECVPFபாலிவுட் நடிகர் சல்மான் கான் – அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் 36.54 கோடி ரூபாயை வசூலித்தது.

ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.

முதல் நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன்மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது.

விரைவில், உலகளாவிய பாலிவுட் பட வசூல் சாதனையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் “தூம் 3” (ரூ.542 கோடி) என்ற இலக்கையும் கடந்து பல்வேறு புதிய சாதனைகளை ’சுல்தான்’ உருவாக்கும் என இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் சமீபத்தில் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் மட்டும் 404.6 கோடி ரூபாயும், இதர உலக நாடுகளில் 145.49 கோடி ரூபாயும் என மொத்தம் 550.9 கோடி ரூபாய் வசூலித்ததன் மூலமாக உலகளாவிய வசூலில் மூன்றாவது இந்தியப் படமாக சுல்தான் இடம்பிடித்துள்ளதாக யாஷ்ராஜ் பிலிம்ஸ் நிர்வாகிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online