கதாநாயகி, காதல், பாடல்கள் இல்லாமல் உருவான புதிய படம்

201607250952274910_new-movie-make-for-not-songs-not-heroine-not-love_SECVPFகார்த்திக் நரேன் என்ற 21 வயது மெக்கானிக்கல் என்ஜினீயர் சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குறும்படங்களை இயக்கி வந்தார். இவர் இயக்கிய ‘விழியின் சுவடுகள்’, ‘நிறங்கள்’, ‘மூன்று’, ‘ஊமைக்குரல்’, ‘பிரதி’ ஆகிய 4 குறும்படங்களும் பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, சினிமா மீது நம்பிக்கை வைத்து தற்போது சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.

இவர் தற்போது ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்றாலும், முக்கிய வேடத்தில் ரகுமானும் நடித்துள்ளார். ரகுமான் இப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளாராம். 16 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஆபாச காமெடி, ஆவேச பஞ்ச் வசனங்கள், பாடல்கள், கதாநாயகி, காதல் என ஒரு கமர்ஷியல் படத்துக்குண்டான அம்சங்கள் எதுவுமே கிடையாதாம். பரபரப்பான கதையும், விறுவிறுப்பான காட்சிகளுமே இப்படத்தில் இருக்கிறதாம்.

இப்படத்தின் படப்பிடிப்பை 28 நாட்களில் நடத்தி முடித்துள்ளனர். கோவை, சென்னை, ஊட்டி என பல ஊர்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் என்பவர் இசையமைத்திருக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர்கள் இருவருமே விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த ‘தாக்க தாக்க’ படத்தில் நடித்தவர்கள்.

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல், தனது ‘நைட் நாஸ்ட்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவும் செய்துள்ளார் கார்த்திக் நரேன். இப்படத்தை பார்த்த ‘ட்ரீம் பேக்டரி பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட முடிவு செய்து ஒப்பந்தமும் போட்டு விட்டார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online