ரஞ்சித் படத்துக்காக பாக்சிங் கற்கும் சூர்யா?

201607261648479178_Surya-boxing-coach-in-ranjith-film_SECVPFபெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தை தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித், அடுத்ததாக யாரை வைத்து படம் இயக்குவார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பரவி வந்தது.

இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் தெலுங்கு ஆடியோ வெளியீட்டில் பா.ரஞ்சித், தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்கப்போவதாக அறிவித்தார். சூர்யாவுக்கு பா.ரஞ்சித் இரண்டுவிதமான கதைகளை சொன்னதாகவும், அதில் ஒரு கதை பிடித்துப் போய் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டதாவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சூர்யாவுக்கு பா.ரஞ்சித் சொன்னதில் பிடித்துப்போனது பாக்சிங் சம்பந்தப்பட்ட கதையாம். ஏற்கெனவே, பாக்சிங் சம்பந்தமாக வெளிவந்த ‘இறுதிச்சுற்று’, ‘பூலோகம்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெற்றுள்ளதால், சூர்யாவும் அந்த கதையை தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ‘எஸ்.3’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் சூர்யா, விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, பா.ரஞ்சித் படத்துக்காக பாக்சிங் கற்றுக் கொள்ளவிருக்கிறாராம். இதற்காக, பாக்சிங் கோச் ஒருவரையும் நியமிக்கவிருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என நம்பலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online