இணையதளத்தில் ஹீரோக்களான கணேஷ் வெங்கட்ராமன் – ஈரோடு மகேஷ்

201607261217555520_Ganesh-Venkatraman-Erode-mahesh-hero-in-Inayathalam_SECVPF‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’ உள்ளிட்ட படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் நீண்டஇடைவெளிக்கு பிறகு கதாநாயகனாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கு ‘இணையதளம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகியாக ஸ்வேதா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், சின்னத்திரையில் காமெடியில் கலக்கிவரும் ஈரோடு மகேஷும் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடிக்கிறார்.

மேலும் நடிகை சுகன்யாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சங்கர்-சுரேஷ் என்ற இரட்டையர்கள் இயக்குவதோடு, படத்தை தயாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை ஏ.வி.எம்.ஸ்டுயோவில் பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கோயம்புத்தூரை கதைக்களமாக கொண்டு உருவாகவிருக்கும் இப்படம் கிரைம் திரில்லராக உருவாகவிருக்கிறது.

அரோல் கரோலி இப்படத்திற்கு இசையமைக்கிறார். கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். அனுகிரஹா ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries