தனுஷ், விக்ரம் பிரபுவுடன் மோதும் நயன்தாரா

201607271239358095_Nayanthara-Clash-with-Dhanush-and-Vikramprabhu_SECVPFதென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா டோலிவுட்டில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷுடன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘பாபு பங்காரம்’. மாருதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, சித்ராஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

நேற்று வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், தமிழிலும் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தமிழில் நயன்தாராவுக்கு இருக்கும் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு ‘செல்வி’ என்ற பெயரில் இப்படத்தை டப் செய்து வெளியிடுகின்றனர்.

இப்படத்தை வருகிற சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 12-ம் தேதி தமிழில் வெளியிடவிருக்கின்றனர். ஏற்கெனவே, ஆகஸ்ட் 12-ந் தேதி தமிழில் தனுஷின் ‘தொடரி’ விக்ரம் பிரபுவின் ‘வாகா’ ஆகிய படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தனுஷ், விக்ரம் பிரபுவுடன் இணைந்து தற்போது நயன்தாராவும் தைரியமாக களத்தில் இறங்கி மோதவுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online