சிம்புவையும், தனுஷையும் விட்டுவிட்டு புதிய படம் இயக்கும் கவுதம் மேனன்?

201607281404574124_Gautham-menon-leaves-simbu-dhanush-to-new-movie_SECVPFகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையிலும், இன்னும் ஒரு சில காட்சிகளுக்காக சிம்பு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்துக் கொண்டிருக்கிறார். இதனால், இந்த படம் இன்னும் கிடப்பிலேயே கிடக்கிறது.

இதையடுத்து, தனுஷை வைத்து ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை ஆரம்பித்தார் கவுதம் மேனன். அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தனுஷ் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’ படத்துக்கு நடிக்கப் போய்விட்டார். இதனால், இப்படமும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இரண்டு நடிகர்களின் கால்ஷீட் சொதப்பலால் மிகவும் நொந்துபோன கவுதம்மேனன், இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு தற்போது ஜெயம் ரவியை வைத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார், தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்களாம். கதாநாயகிகளாக அனுஷ்கா, தமன்னா நடிக்கவிருக்கிறார்களாம். விரைவில் படப்பிடிப்பை தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே மற்றொரு படத்தில் கமிட்டாவது கவுதம் மேனனுக்கு ஒன்றும் புதிதல்ல.

ஏற்கெனவே, சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே, அஜித் கால்ஷீட் கிடைத்தது என்பதற்காக இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, அஜித் படத்தை இயக்கி வெளியே கொண்டு வந்தார். அங்கு ஆரம்பித்த பிரச்சினை இன்னும் கவுதம் மேனனை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online