நடிகர் தனுஷ் பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த நட்சத்திரங்கள்

201607281225199452_Dhanush-Birthday-Celebrity-Wishes_SECVPFதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் இன்று தனது 33 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தனுஷின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் தவிர சக நட்சத்திரங்களும் தனுஷிற்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆர்.ஜே.பாலாஜி கூறும்போது, புதுப்பேட்டை, பொல்லாதவன், ஆடுகளம் மாதிரியான படங்களை தொடர்ந்து தரவேண்டும் என்று தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனுஷுடன் ‘கொடி’ படத்தில் நடித்துள்ள நடிகை அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் என்னும் மேஜிக்கை நான் என் கண்கள் வழியாக பார்த்துவிட்டேன். உங்களுடன் நடிக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன் என வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர, நடிகர்கள் சிவகார்த்திகேயன், பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் தனுஷுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். தனுஷ் தற்போது ‘வடசென்னை’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் இவரது பிறந்தநாளை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries