பிறந்தநாளில் ரஜினியிடம் ஆசீர்வாதம் பெற்ற தனுஷ்

201607291132000089_Rajini-blessed-dhanush-his-birthday_SECVPFதனுஷ் நேற்று தனது பிறந்தநாளை மிகவும் எளிமையான முறையில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளனர். திரையுலக பிரபலங்கள் பலரும் தனுஷுக்கு தொலைபேசியிலும், சமூக இணையதளங்கள் வாயிலாகவும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இந்நிலையில், தனுஷ் தனது பிறந்தநாளையொட்டி அவரது மாமனாரும், நடிகருமான ரஜினியை நேரில் சந்தித்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுள்ளார். ஓய்வுக்கு பிறகு சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினியை தனுஷ் நலம் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘கபாலி’ வெற்றிக்கு ரஜினிக்கு தனுஷ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் தற்போது ‘தொடரி’, ‘கொடி’ ஆகிய படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ‘வடசென்னை’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், கவுதம் மேனன் இயக்கும் ‘எனைநோக்கி பாயும் தோட்டா’விலும் நடித்து வருகிறார். மேலும், இவர் கைவசம் நிறைய படங்களும் உள்ளன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online