அஜித் படத்துக்கு ஹீரோயின் உறுதியானது

201607301320571580_Ajith-movie-heroine-kajal-agaarwal-confirmed_SECVPFகடந்த இரண்டு வாரங்களாக கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்தை பற்றியும், அஜித்தின் அடுத்த படத்தின் ஹீரோயின் யார் என்பது பற்றிய செய்திகளும்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில், அஜித்தின் அடுத்த படத்துக்கான ஹீரோயின் யார் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்தவர் காஜல் அகர்வால்தான்.

அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் ஹீரோயினாக காஜல்அகர்வால்தான் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து காஜல் அகர்வாலே வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

269907AD-D665-4F44-8C00-2ADC8EB0E78D_L_styvpfதனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கப்போவதை உறுதி செய்தார். இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக அக்ஷராஹாசனும் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ‘வேதாளம்’ படத்தில் லட்சுமிமேனன் கதாபாத்திரம் போன்று அக்ஷராஹாசனின் கதாபாத்திரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது, இன்னொரு ஹீரோயினும் இப்படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த நாயகிக்கான தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries