இருமுகனில் ஒருமுகத்தை முடித்த ஹாரிஸ் ஜெயராஜ்

201607311348060344_Harrish-jayaraj-complete-irumugan-first-half-background_SECVPFவிக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘இருமுகன்’. இப்படத்தை ‘அரிமா நம்பி’ இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இப்படத்திற்கான பின்னணி இசை பணிகளை மும்முரமாக செய்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.

தற்போது ஹாரிஸ் ‘இருமுகன்’ முதல் பாதியின் பின்னணி இசை அனைத்தையும் முடித்துவிட்டாராம். இன்னும் இரண்டாம் பாதிக்கு மட்டும்தான் பின்னணி இசை கோர்க்கும் பணி பாக்கி உள்ளதாம். விரைவில், அதையும் முடித்துவிட்டு படக்குழுவினரிடம் படத்தை ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ‘இருமுகன்’ படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற ஆக.2-ந் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த ஆடியோ வெளியீட்டில், சிவகார்த்திகேயன், நிவின் பாலி, ராம்சரண் என தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமா உலகை சேர்ந்த இளம் நட்சத்திரங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆடியோவை வெளியிடவுள்ளனர்.

‘இருமுகன்’ படத்தில் விக்ரம் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். நயன்தாராவுடன், நித்யாமேனனும் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். ஷிபு தமீன்ஸ் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries