கனவு நிஜமான சந்தோஷத்தில் கலை இயக்குனர் அமரன்

201607311132281486_Art-director-Amaran-work-in-maniratnam-movie_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘லிங்கா’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றியவர் அமரன். அப்படத்தில் அவர் அமைத்திருந்த அரங்குகள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக, அணைக்கட்டு அரங்கு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் பணியாற்றி வரும் அமரன், தன்னுடைய நீண்டநாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இருக்கிறார்.

திரைத்துறை சார்ந்த அனைவருக்கும் ஒரு கனவு இருக்கும். அதில், இயக்குனர் மணிரத்னத்தின் ஒருபடத்திலாவது இணைந்திட வேண்டும் என்ற கனவு பல பேருக்கு உண்டு. அப்படி இருப்பவர்களில் ஒருவர்தான் கலை இயக்குனர் அமரன். இவருடைய நீண்ட நாள் கனவு தற்போது நிஜமாகியிருக்கிறது.

இயக்குனர் மணிரத்னம் தற்போது இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் கலை இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு அமரனுக்கு கிடைத்துள்ளது. அமரனுக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. அதாவது, பிரபல இயக்குனரும், வீணை வித்வானுமாகிய மறைந்த ‘வீணை’ பாலச்சந்தர் அவர்களுக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. இந்த விழாவுக்கு அரங்கம் அமைக்க அமரனுக்கு வாய்ப்பு வந்தது. அதற்கான அரங்கமும் அவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

விழா நடக்கும்போது, அந்த விழாவை தலைமை ஏற்று நடத்த சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மணிரத்னம். இந்த விழாவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கை பார்த்ததும் பிரமித்துப்போன மணிரத்னம், அரங்கம் அமைத்த கலை இயக்குனர் அமரனின் பணிகள் பிடித்துப்போக ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒப்பந்தம் செய்தார்.

சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்த ‘காற்று வெளியிடை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் அமரன் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries