கபாலி இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்?

201607311020347799_Vijay-wish-act-kabali-director-pa-ranjith-direction_SECVPFரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் ‘கபாலி’ படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித்துக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. பெரிய நடிகர்கள் தங்கள் படங்களை ரஞ்சித் இயக்கவேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்நிலையில், பா.ரஞ்சித் அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து, விஜய்யும், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, கலைப்புலி தாணு, பா.ரஞ்சித்தை வைத்து மீண்டும் ஒரு படம் தயாரிப்பேன் என்று தெரிவித்திருந்தார். விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.

அனேகமாக, விஜய்யை வைத்து பா.ரஞ்சித் படம் இயக்குவது உறுதியானால், அந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பார் என்று தெரிகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்வரை பொறுமையாக காத்திருப்போம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online