கவுதம் மேனனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

201608011644454874_Surya-says-Thanks-to-Gautham-Menon_SECVPFதமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த படம் ‘காக்க காக்க’. கவுதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் வெளிவந்து இன்றோடு 13 வருடம் ஆகியுள்ளது. இதனையொட்டி ரசிகர்கள் பலரும் இப்படம் குறித்த மறக்க முடியாத தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் நாயகன் சூர்யா இப்படம் குறித்து கூறும்போது ”எனக்கும், ஜோதிகாவிற்கும் மிகவும் பிடித்த படம் ‘காக்க காக்க’. இப்படம் எனது வாழ்க்கையையே மாற்றி விட்டது. இதற்காக கவுதம் மேனனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு கவுதம் மேனனும் சூர்யாவுக்கு நன்றி கூறிவிட்டு, நீங்கள் இல்லாமல் ‘காக்க காக்க’ சாத்தியமில்லை என்று தெரிவித்திருக்கிறார். ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களுக்குப் பின் இருவரும் இணையவிருந்த ‘துருவ நட்சத்திரம்’ படம் ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online