கால்ஷீட் பிரச்சினையால் சுந்தர்.சி படத்திலிருந்து விலகினாரா விஜய்?

201608011632272336_Vijay-Evacuated-Sundar-c-Movie_SECVPFகால்ஷீட் பிரச்சினை காரணமாக சுந்தர்.சியின் படத்திலிருந்து விஜய் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 1௦௦-வது படத்தை சுந்தர்.சி இயக்கவிருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தை வரலாற்று திரைக்கதையாக சுந்தர்.சி எழுதி வருகிறார். ‘பாகுபலி’, ‘எந்திரன்’ படங்களை மிஞ்சும் பட்ஜெட் என்பதால் தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்யை நடிக்க வைக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.

சமீபத்தில் இப்படத்திற்காக சுந்தர்.சி விஜய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் விஜய் பிடிகொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சுந்தர்.சி இந்த படத்துக்காக மொத்தமாக 25௦ நாட்கள் கால்ஷீட் கேட்டதுதான் விஜய் இப்படத்தைத் தவிர்க்கக் காரணம் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது ‘விஜய் 6௦’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online