ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ பெங்களூரில் தொடங்கியது

201608011558290161_Shivalinga-Shooting-Starts-in-Bangalore_SECVPFசிவராஜ் குமார்-வேதிகா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் கன்னடத்தில் வெளியான திகில் படம் ‘சிவலிங்கா’. பி.வாசு இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அவரது மகனும், நடிகருமான சக்தி வாசு முக்கிய வேடமேற்று நடித்திருந்தார். இந்த படத்தை தமிழில் ரஜினியை வைத்து ‘சந்திரமுகி’ படத்தின் 2-வது பாகமாக ரீமேக் செய்ய பி.வாசு திட்டமிட்டார்.

ஆனால் ரஜினியை வைத்து பி.வாசு தமிழில் இயக்கும் முயற்சிகள் வெற்றி பெறாததால், இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸை நாயகனாகவும், ரித்திகா சிங்கை நாயகியாகவும் பி.வாசு ஒப்பந்தம் செய்தார். கன்னடத்தில் நடித்திருந்த அதே வேடத்தை தமிழிலும் சக்தி வாசு ஏற்றிருக்கிறார்.

முதலில் ‘சந்திரமுகி 2’ என்று இப்படத்துக்கு தலைப்பு வைத்து பின்னர் ‘சிவலிங்கா’ என்று மாற்றம் செய்தனர். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை இன்று பெங்களூரில் தொடங்கியுள்ளனர். பேய் படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ராகவா லாரன்ஸ் ‘சிவலிங்கா’வில் நடிப்பதால் தமிழிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online