மீண்டும் இணையும் லட்டு கூட்டணி

201608021553132838_Santhanam-again-Team-up-with-KSManikandan_SECVPFசந்தானம், பவர் ஸ்டார், சேது, விசாகா சிங், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2௦13-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’. ரூ.3 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.12 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் சந்தானத்தின் ஹீரோ ஆசைக்கு வித்திட்ட படமாகவும் இது அமைந்தது.

தற்போது முழுநேர ஹீரோவாக மாறியிருக்கும் சந்தானம் அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ புகழ் மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் மீண்டும் ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையுடன் கூடிய பொழுதுபோக்கு படமாக இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் மணிகண்டன் எழுதி வருகிறார். ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உட்பட பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல் வெஞ்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்தபின் படத்தலைப்பை அறிவிக்க முடிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதம் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online