விக்ரமின் மொபைல் ரிங்டோன் என்ன தெரியுமா?

201608021545140883_What-is-vikram-mobile-ringtone_SECVPFவிக்ரமுக்கு ‘சாமுராய்’ முதல் தற்போது நடித்து வரும் ‘இருமுகன்’ படம் வரை ஹாரிஸ் ஜெயராஜ் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இப்படங்கள் அனைத்திலும் படம் பேசப்பட்ட அளவுக்கு ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பெரியளவில் பேசப்பட்டன.

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இருமுகன்’ படத்தின் பாடல்களும், டிரைலரில் அவருடைய பின்னணி இசையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், அடுத்து விக்ரம் நடிக்கவிருக்கும் ‘சாமி-2’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கிறார்.

இப்படி ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ந்து விக்ரமுக்காக பல ஹிட் பாடல்களை கொடுத்தாலும், விக்ரமுக்கு ஹாரிஸ் இசையில் வெளிவந்த ‘சாமுராய்’ படத்தில் இடம்பெற்ற ‘மூங்கில் காடுகளே’ பாடல் மட்டும்தான் மிகவும் பிடிக்குமாம். அந்த பாடலைத்தான் தனது மொபைல் போனின் ரிங் டோனாகவும் வைத்துள்ளாராம்.

இந்த விஷயத்தை இன்று நடைபெற்ற ‘இருமுகன்’ ஆடியோ வெளியீட்டில் நடிகர் விக்ரமே தெரிவித்தார். ‘சாமுராய்’ விக்ரம் நடித்த படம்தான் என்றாலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காகவே அந்த பாடலை தனது ரிங்டோனாக வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online