சவரக்கத்தி ‘சிங்கிள் டிராக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

201608021343350328_Savarakathi-Single-Track-Release_SECVPFஆதித்யா இயக்கத்தில் ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘சவரக்கத்தி’ . அரோல் கெரொலி இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தன்னுடைய லோன்வோல்ஃப் புரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் இப்படத்தைத் தயாரித்து வருகிறார். ராம்-பூர்ணா நாயகன், நாயகியாகவும் மிஷ்கின் வில்லனாகவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டதால் தற்போது படத்திற்கான விளம்பரங்களில் படக்குழு கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. முதலாவதாக இப்படத்தின் சிங்கிள் டிராக்கை வருகின்ற 4-ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்த மாத இறுதியில் பாடல்களையும், செப்டம்பரில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online