மீண்டும் தள்ளிப்போனது தனுஷின் ‘தொடரி’

201608031609215310_Thodari-Release-date-Postponed_SECVPFதனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, ராதாரவி, கருணாகரன், ஹரிஷ் உத்தமன், நாசர் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் ‘தொடரி’. பிரபு சாலமன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க பாரம்பரிய நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் படத்தைத் தயாரித்திருக்கிறது.

ஜூலையில் ‘கபாலி’ வந்ததால் ஆகஸ்ட் 12-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையவில்லையாம்.

இதனால் ஆகஸ்ட் 19-ம் தேதி படத்தை வெளியிடலாமா? இல்லை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கலாமா? என படக்குழு ஆலோசித்து வருகிறதாம்.

விநியோகஸ்தர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் ‘தொடரி’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries