அட்லியின் புதிய ஹீரோ நிவின் பாலி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

201608031331296039_Atlee-new-hero-nivin-pauly_SECVPF‘ராஜா ராணி’, ‘தெறி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் அட்லி தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். ‘A For Apple’ என்று அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படமாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை அட்லி தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தை அட்லியின் நண்பர் சூர்யா இயக்கவிருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு தற்போது நிவின்பாலி மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகையர் விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘தெறி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது அவருக்கு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. இதுதவிர, அஜித்துக்கும் அட்லி ஒரு கதை கூறியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில், இதுகுறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online