தாரை தப்பட்டையைத் தொடர்ந்து புதுமுகங்களை இயக்கும் பாலா

201608041756107382_Bala-Direct-Newcomers-movie_SECVPF‘தாரை தப்பட்டை’ படத்துக்குப் பின் வேல ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ கதையை படமாக எடுக்க பாலா திட்டமிட்டிருந்தார். ஆனால் ‘குற்றப் பரம்பரை’ கதை தொடர்பாக பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் விவகாரம் தொடர்பாக பாலா ”நான் குற்றப் பரம்பரை படத்தின் சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு என்னுடைய கற்பனை கலந்து படத்தின் திரைக்கதையை இயக்கவிருக்கிறேன்” என்று விளக்கம் தெரிவித்தார்.

மேலும் ஆர்யா, ராணா, அதர்வா, அரவிந்த் சாமி, விஷால் ஆகியோரை வைத்து படத்தை இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து அப்படத்துக்கான முதற்கட்ட பணிகளையும் கவனித்து வந்தார்.

இந்நிலையில் புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்க பாலா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடித்து விட்டு விஷால், ஆர்யா இணையும் படத்தை எடுப்பது பாலாவின் திட்டம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘குற்றப் பரம்பரை’ படத்துக்கு முந்திக்கொண்டு பூஜை போட்ட பாரதிராஜாவும் ‘அலைகள் ஓய்வதில்லை 2’ வது பாகத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries