அன்புக்கும் அறிவுக்கும் பாராட்டு மழை பொழிந்த ரஜினி

201608041505491239_Rajini-appreciate-anbu-arivu-for-kabali_SECVPFஒரு படத்தில் ஒரு விஷயம் பிடித்துப்போனால் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பாராட்டுவதில் ரஜினி முதன்மையானவர். நிறைய இயக்குனர்கள் தங்கள் படங்களை ரஜினிக்கு போட்டுக் காண்பித்து அவரிடமிருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளனர். அதேபோல் தன்னுடைய படங்களில் பணியாற்றும் சிறப்பான கலைஞர்களையும் அவர் பாராட்ட தயங்கியதில்லை.

‘கபாலி’ படப்பிடிப்பின்போதுகூட ரித்விகாவின் நடிப்பை பார்த்து கண்கலங்கி, அவரை ரஜினி பாராட்டியதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றிய அன்புமணி-அறிவுமணி இரட்டையர்களின் பணியை பார்த்து வியந்த ரஜினி, அவர்களை அழைத்து அவர்களுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ரஜினி சாரிடமிருந்து சற்றுமுன் எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ரஜினி சார் ‘கபாலி’ படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாக எங்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் கூறினார்.

அவருடைய பேசிய தருணம் ஒரு கனவு போல இருந்தது. எங்கள் வாழ்க்கையில் இது நடக்குமென்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. அவர் போனை வைத்தபிறகும் எங்களுக்கு அந்த உணர்விலிருந்து வெளிவரமுடியவில்லை.

இந்த நாளுக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். எங்களுடைய சந்தோஷத்தை வெளியே சொல்ல வார்த்தைகளே இல்லை. இது எங்களது கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். இந்த விஷயம் எல்லாம் நடப்பதற்கு ‘கபாலி’ படக்குழுதான் முக்கிய காரணம். இந்த தருணத்தில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.

அன்புமணி-அறிவுமணி இருவர்களும் ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர்களாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்கள். இவர்கள் மலையாளத்தில் 30 படங்களுக்கும் இந்தியில் 2 படங்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online