ஜீவாவின் சங்கிலி புங்கிலி கதவைத் தொற முடிந்தது

201608041130516695_Sangili-Bungili-Kathava-Thorae-Shooting-Wrapped-up_SECVPFஐகே ராதா இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருக்கும் படம் ‘சங்கிலி புங்கிலி கதவைத் தொற’. இதில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா, ராதாரவி, கோவை சரளா மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

ஆப்பிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் அட்லி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் பழனியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் மற்றொரு படமான ‘திருநாள்’ நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online