தல 57 லேட்டஸ்ட் அப்டேட்

201608041053244866_Thala-57-Latest-Updates_SECVPF‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், கருணாகரன், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் ‘தல 57’ படம் உருவாகி வருகிறது. ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக ‘தல 57’ படத்தின் திரைக்கதையை சிவா அமைத்திருப்பதாக கூறுகின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது பெல்கிரேட்டில் நேற்று தொடங்கியிருக்கிறது.
இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பை வெளிநாட்டிலும் 30 சதவிகித படப்பிடிப்பை இந்தியாவிலும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அஜித் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வால் நடிக்கிறாராம். மற்றொரு ஹீரோயினாக அக்ஷரா ஹாசன் ஆக்ஷன் கலந்த அதிரடி ஹீரோயினாக நடிக்கிறார்.

காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் தவிர நிறைய வெளிநாட்டு நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்களாம்.
அனிருத் இசையில் படத்தில் மொத்தம் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன.

பாடல்களை ஹிட்டாக்க கடுமையாக உழைத்து வரும் அனிருத் ஏற்கனவே படத்தின் தீம் மியூசிக்கை முடித்து விட்டாராம்.
படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries