ரஜினியுடன் நடித்ததால் உலகம் முழுவதும் பிரபலம் ஆனேன்- கபாலி விஷ்வந்த்

201608061747581628_rajini-with-actining-world-throw-kabali_SECVPFஅட்டகத்தி, வத்திகுச்சி, தடையறதாக்க, தோனி போன்ற படங்களில் நடித்தவர் விஷ்வந்த். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ‘ஜெய்’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது…

“கபாலி படப்பிடிப்பின் போது ரஜினிசாரை வரவேற்கும் காட்சியிலும், கபாலியின் மனைவி குமுதவல்லியை பார்த்ததாக கூறும் காட்சியிலும் நடித்த போது சூப்பர் ஸ்டார் என்னை அரவணைத்து ‘சூப்பர், சூப்பர்’ என கூறி வாழ்த்தினார். இயக்குனர் ரஞ்சித்தும், படக்குழுவினரும் ரசித்து கைதட்டி பாராட்டினார்கள்.

கபாலியின் படத்தை பார்த்த முதல் நாளில் லதா ரஜினிகாந்த் எனது நடிப்பை பார்த்து யதார்த்தமாக நடித்தாய் மிகவும் ரசித்தேன் என்று கூறி வாழ்த்தினார்.

படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சார் என்னை அழைத்து பாராட்டினார். இப்போது உலகம் முழுவதும் என்னை அடையாளம் தெரிகிறது. பல்வேறு நாடுகளில் இருந்தும் பாராட்டுகள் வருகின்றன. போன்களும் ஏராளமாக வருகின்றன.

சூப்பர் ஸ்டாரிடம் நான் சென்னை தமிழ் பேசி “நம்பி வந்தோர் கைவிட படார்”, ‘மெட்ராஸ்காரங்க சார்’ என்று பேசிய வசனம் மறக்க முடியாததாகிவிட்டது. இந்த பாராட்டுகள் அனைத்தும் இயக்குனர் ரஞ்சித் சாரையே சேரும்.

கபாலியில் என்னை பார்த்த பிறகு கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. நான் இயக்குனர்களின் கதையின் நாயகனாக நடிப்பதையே விரும்புகிறேன். கதாபாத்திரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online