குழந்தை படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை பானு

201608071901251981_Actress-Bhanu-baby-picture-posted-on-Facebook_SECVPFகேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களில் முக்தா என்ற பெயரிலும், தமிழில் பானு என்ற பெயரிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழில் டைரக்டர் ஹரி டைரக்‌ஷனில் விஷால் ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமான நடிகை பானு, கடைசியாக ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார்.

2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் மலையாள பாடகி ஒருவரின் தம்பி ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நடிகை பானு, கணவருடன் கோட்டயத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பானுவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அந்த குழந்தையின் படத்தை நடிகை பானு சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். தான் கர்ப்பமாக இருந்த படத்தையும் கணவருடன் குழந்தையை கொஞ்சுவது போன்ற படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries