இந்தியில் 2 டிரைலர்களுடன் வெளியாகும் அஜித்தின் வேதாளம்

201608081651462254_Vedhalam-releasing-hindi-with-2-trailers_SECVPFஅஜித் நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட மெகா ஹிட் படம் ‘வேதாளம்’. இப்படம் அஜித்தின் மற்ற படங்களின் வசூல்களை எல்லாம் முறியடித்து புதிய சாதனை படைத்தது. இப்படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கியிருந்தார். ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி, கபீர்சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தமிழில் வெற்றிபெற்ற இப்படத்தை தற்போது இந்தியிலும் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். தற்போது, இந்தி டப்பிங் பணிகளெல்லாம் முடிவடைந்துவிட்ட நிலையில், வருகிற ஆக 14-ந் தேதி இப்படத்தை வெளியிடவுள்ளனர். கூடுதல் விஷயம் என்னவென்றால், ‘வேதாளம்’ இந்தி படத்திற்காக இரண்டு டிரைலர்களை படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர் என்பதுதான்.

ஏனென்றால், தமிழில் வெளியான ‘வேதாளம்’ படத்திற்கு டிரைலரே வெளியாகவில்லை. ஒரேயொரு டீசரை மட்டும்தான் வெளியிட்டிருந்தனர். தற்போது இந்தி பதிப்பில் இரண்டு டிரைலர்களை வெளியிட்டுள்ளது, இந்தி ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை இந்தியில் கோல்டு மைன்ஸ் டெலிபிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

‘வேதாளம்’ இந்தி டிரைலரை பார்க்க…

https://youtu.be/0eNFMT5eYV4

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries