விஷால் தற்போது சுராஜ் இயக்கத்தில் ‘கத்திச்சண்டை’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘இருமுகன்’ படத்தை தயாரித்த சிபுதமீன்ஸ் தயாரிப்பில் விஷால் ஒரு படம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.
இந்த செய்திக்கு விஷால் தரப்பிலிருந்து மறுப்பு வந்துள்ளது. சிபு தமீன்ஸ் தயாரிக்கும் படத்தில் விஷால் நடிப்பதாக வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்தி என்று கூறப்பட்டுள்ளது. ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தின் மூலம் வடிவேலு காமெடியான ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். வடிவேலுவுடன் சூரியும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். வரும் ஆக.12-ந் தேதி ‘கத்திச்சண்டை’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளனர்.