விஜய் படத்தில் பெங்காலி நடிகை

201608081202252367_Bengali-Actress-joint-vijay-60_SECVPFவிஜய் தற்போது பரதன் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது பெங்காலி நடிகை பாப்ரி கோஷ் என்பவரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த படப்பிடிப்பில் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் படமாக்கியுள்ளனர்.

பாப்ரி கோஷ் ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, விஜய் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் மகளாக நடிக்கிறாராம். இவருக்கும் விஜய்க்கும் ரொமான்ஸ் காட்சிகள் இல்லாவிட்டாலும் விஜய்யுடன் பெரும்பாலான காட்சிகளில் வருகிறாராம்.

இப்படத்தில் திருநெல்வேலி பாஷை பேசி நடித்துள்ளாராம். முதலில் பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்ட பாப்ரி கோஷ், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு நடித்துக் கொடுத்துள்ளாராம். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துவருகிறார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online