மா.கா.பா.ஆனந்த்-ஐஸ்வர்யா ராஜேஷ் சேர்ந்து போடும் கடலை

201608081049446344_Makapa-Anand--Ishwarya-Rajesh-joint-Kadalai_SECVPF‘வானவராயன் வல்லவராயன்’, ‘அட்டி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மா.கா.பா.ஆனந்த் தற்போது புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இவர் நடிக்கும் அந்த படத்திற்கு ‘கடலை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சஹாய சுரேஷ் என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பொன்வண்ணனும், காமெடிக்கு யோகி பாபுவும், நகைச்சுவை கலந்த வில்லனாக ஜான் விஜய்யும் நடிக்கின்றனர். மேலும், மனோபாலா, தவசி, ராதா, சீமா, சென்னியம்மால் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். என்பவர் இசையமைக்கிறார். ராகவ் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

இப்படம் நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கலந்து உருவாகவுள்ளது. பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல் இன்றைய இளம் தலைமுறையினரக்கு தேவையான கருத்துக்களும் இப்படத்தில் உள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries