சுந்தர்.சியின் பிரம்மாண்ட படத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்ப கலைஞர்கள்

201608091202565770_Sundar-C-Next-movie-participate-big-technicians_SECVPFசுந்தர்.சி பிரம்மாண்ட பட்ஜெட்டில் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டிருக்கிறார். சரித்திரகால பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயர் வைத்துள்ளதாக இணையதளங்களில் ஒரு பக்கம் செய்தி பரவிக்கொண்டு வருகிறது.

இப்படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று படக்குழுவினர் முடிவு செய்துவரும் நிலையில், தற்போது ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வு செய்து வருகின்றனர். படம் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்காக மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்துள்ளனர்.

அதன்படி, இப்படத்திற்கு ஏற்கெனவே இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்திருந்தனர். தற்போது ஒளிப்பதிவாளராக இந்தியில் சரித்திரகால பின்னணியில் வெளிவந்த ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் சட்டார்ஜியை இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மேலும், சவுண்ட் என்ஜினியராக ரசூல் பூக்குட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கலை இயக்குனராக சாபு சிரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் இணைந்துள்ளது இப்படத்திற்கு மேலும் பிரம்மாண்டம் சேர்க்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தில் நடிக்க ஏற்கெனவே விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. தொடர்ச்சியாக அதிக நாட்கள் கேட்டதால், இப்படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் அடிபடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online