மறைந்த பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச்சடங்கு நாளை மறுநாள் நடக்கிறது

Panchu-Arunachalams-death-a-huge-loss-to-Tamil-filmdomஇயக்குனரும், வசனகர்த்தாவும், தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம் இன்று சென்னையில் காலமானார். பஞ்சு அருணாச்சலத்தின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்கு வரும் வியாழக்கிழமை நடைபெறப் போவதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

பஞ்சு அருணாச்சலத்தின் மூத்த மகன் சண்முகம் மற்றும் இளைய மகள் சித்ரா ஆகியோர் அமெரிக்காவில் வசிப்பதால், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து கிளம்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவர்கள் சென்னை வந்து சேருவது காலதாமதமாவதால் வியாழக்கிழமை பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், அவரது உடலை கெடாமல் பாதுகாப்பதற்காக சென்னை போரூர் ராமச்சந்திர மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வியாழக்கிழமை மாலை பஞ்சு அருணாச்சலத்தின் இறுதிச் சடங்கு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries