பாடல்களே இல்லாமல் உருவான படத்தின் டிரைலரை வெளியிடும் ஏ.ஆர்.ரகுமான்

201608091720506946_AR-Rahman-trailer-unveiled-to-Thuruvangal-Pathinaru_SECVPF21 வயது மெக்கானிக்கல் என்ஜினியரான கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியிருக்கிற படம் ‘துருவங்கள் பதினாறு’. இப்படத்தில் பிரபல நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற அனைவரும் புதுமுகங்கள். கிரைம் திரில்லருடன் உருவாகியிருக்கிற இப்படத்தில் பாடல்களே கிடையாது.

பாடல்களே இல்லாமல் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிடவுள்ளார். வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று மாலை 4 மணியளவில் இப்படத்தின் டிரைலரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிடவுள்ளார்.

துருவங்கள் பதினாறு கிரைம் திரில்லராக உருவாகியுள்ளது. ரகுமான் இப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடிக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஊட்டி என பல ஊர்களில் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 28 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார்கள். இப்படத்திற்கு பின்னணி இசையை ஜேக்ஸ் பிஜாய் என்பவர் அமைத்திருக்கிறார்.

இப்படத்தை நைட் நாஸ்ட்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் நரேன் தயாரித்திருக்கிறார். ட்ரீம் பேக்டரி நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online