கபாலியில் ரஜினி பயன்படுத்திய பொருட்கள் ஏலத்திற்கு வருகிறது

201608091524383839_Kabali-Rajini-use-suits-auction_SECVPFசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இப்படத்திற்கான புரோமோஷன் மூலமாகவே இப்படம் பெரிய லாபத்தை பெற்றது. ஏர்-ஏசியா, ஏர்டெல், சாக்லேட், முத்தூட் நாணயங்கள், கபாலி பொம்மைகள் என பல்வேறு வழிகளில் ‘கபாலி’க்கு வருமானம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினி பயன்படுத்திய கோட் சூட், வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஏலத்துக்கு விடப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யில் ரஜினி பயன்படுத்திய உடைகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவை. இவைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே ஏலம் விடப்போவதாக கூறப்படுகிறது.

விரைவில் ஏலம் குறித்த விஷயங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries