அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் விஜய்யை கொண்டாடும் இளைஞர்கள்

201608101514562965_Will-vijay-do-it-for-this-tribal-village_SECVPFதமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமேஷ் கேசவன் சமீபத்தில் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் உதவி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். அந்த பகுதியில் உள்ள அட்டப்பாடி என்ற கிராமத்திற்கு அவர் சென்றபோது, தெருவிளக்கு, கழிப்பறை, சாலை வசதி என அடிப்படை வசதிகள் இல்லாத அந்த கிராமத்தை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சர்மும் அடைந்தார்.

ஆனால், இதையெல்லாம்விட அந்த கிராமத்தில் உள்ள நிறைய பேர் விஜய் ரசிகர்கள் என்பதுதான் எல்லாவற்றையும்விட ஆச்சர்யமான விஷயமாக அவருக்கு அமைந்துள்ளது.

இதுகுறித்து உமேஷ் கேசவன் கூறும்போது, நான் சமீபத்தில் சென்றிருந்த அடப்பாடி என்ற கிராமத்தில் இந்த நூற்றாண்டிலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழும் மக்களை சந்திக்க நேர்ந்தது. அங்குள்ள இளைஞரிடம் கழிப்பறை எங்கே என்று கேட்டபோது, பெரிய வெட்டவெளியை காண்பித்து அதைத்தான் கழிப்பறையாக உபயோகிப்பதாக கூறினார்.

வெளியுலகம் தெரியாமல், கல்வியறிவு இல்லாமல் அங்குள்ள இளைஞர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். விவசாயம் இல்லாத நாட்களில் தமிழ் சேனல்களில் விஜய் படங்களையும், விஜய்யின் பாடல்களையும் கேட்பதுதான் தங்களது பொழுதுபோக்கு என்று கூறினார்கள்.

கிராமங்களின் முன்னேற்றத்திற்காக செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான ரூபாய் இந்த கிராமத்தை சென்றடையவில்லை. மாறாக விஜய் மட்டும் சென்றுள்ளார் என்பதை பார்க்கும்போது ஆச்சர்யமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும், அவர் கூறும்போது, அட்டப்பாடி கிராம மக்களின் கல்வி மற்றும் அடிப்படை ஆதாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அட்டப்பாடி கிராமத்திற்கு விஜய் நேரில் வந்தால், அந்த கிராம மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவதோடு, அவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இவருடைய கோரிக்கை ஏற்று கூடிய விரைவில் விஜய் அந்த கிராமத்திற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries