சிம்பு பாடலை வெளியிடும் சேவாக்

201608101302397199_Sehwag-release-simbu-song_SECVPFதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்டு 27-ந் தேதி நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில், தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் மோதுகின்றன.

இதில் மதுரை சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக சிம்பு, ‘நெருப்புடா’ அருண் காமராஜ் உடன் இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளார். ‘ஆட்டைக்கு ரெடியா’ என்று தொடங்கும் இந்த பாடலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டீசர் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், முழு பாடலையும் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இன்று ‘ஆட்டைக்கு ரெடியா’ முழு பாடலையும் வெளியிடவுள்ளனர். இந்த பாடலை முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சேவாக் வெளியிடவுள்ளார். சென்னையில் நடைபெறும் இதற்கான விழாவில் சேவாக் கலந்துகொண்டு வெளியிடவுள்ளார். இந்த பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online