அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானது

201608101023260754_Achcham-Yenpathu-madamaiyada-movie-release-date-confirmed_SECVPFசிம்பு-மஞ்சிமா மோகன் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கியுள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்ட நிலையிலும், படம் எப்போது வெளிவரும் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி, ‘அச்சம் என்பது மடமையடா’ படம் வருகிற செப்டம்பர் 9-ந் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று கவுதம்மேனன் டுவிட்டரில் கூறும்போது, இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குள் இப்படத்தின் ரிலீஸ் தேதி இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மிகவும் பிரபலமான ‘தள்ளிப்போகாதே’ பாடல் இடம்பெறாதது குறித்து சிம்புவுக்கும்-கவுதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. தற்போது அந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் களைந்து படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries