அக்ஷய்குமாரை பாராட்டிய ரஜினிகாந்த்

201608111234588685_Rajini-wish-to-Akshaykumar_SECVPF‘கபாலி’யைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘2.ஓ’. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி வருகிறார். கதாநாயகியாக எமிஜாக்சன் நடித்துவருகிறார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷ்ய்குமாரும் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே, அக்ஷய்குமார் பாலிவுட்டில் ரஸ்தம் என்ற படத்திலும் நடித்து வந்தார். தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படம் வெற்றிபெற அக்ஷய்குமாருக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில் எப்போதாவது ஒருமுறைதான் பதிவுகளை பதிவிடுவார். அவர் பிப்ரவரி மாதம் விசாரணை படத்தை பார்த்துவிட்டு படத்தை பற்றி டுவிட்டரில் பதிவு செய்திருந்தனர். அதன்பிறகு, கடந்த 9-ந் தேதிதான் டுவிட்டரில் அவர் பஞ்சு அருணாச்சலம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அதன்பிறகு, அக்ஷய்குமாருக்கு தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் பாராட்டால் அக்ஷய்குமார் நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார். ரஸ்தம் படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். 1959-களில் கடற்படை அதிகாரி ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தொகுத்து படமாக எடுத்துள்ளனர்.

‘ரஸ்தம்’ படத்தின் டிரைலரை கீழே பாருங்கள்…

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries