தீபாவளிக்கு களமிறங்கும் கத்திச்சண்டை

201608111202365401_Kaththi-sandai-release-in-Diwali_SECVPFவிஷால்-தமன்னா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘கத்திச்சண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு, தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார். விஷால் நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுதான். இந்த படத்தின் பாடல் காட்சிகளுக்காகவும், சண்டைக் காட்சிகளுக்காகவும் மற்றும் இதர காட்சிகளுக்காகவும் கலை இயக்குனர் உமேஷ் குமார் கைவண்ணத்தில் பிரம்மாண்டமாய் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் முதல் பாதியில் சூரியும், இரண்டாம் பாதியில் வடிவேலுவும் காமெடியில் கலக்க இருக்கிறார்கள். பக்கா கமர்ஷியல், ஆக்ஷன், காமெடி படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து இருக்கிறார். இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online