சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா அறிவிப்பு: முதல்வருக்கு நடிகர் சங்கம் பாராட்டு

201608121550067881_Cinema-artist-award-function-nadigar-sangam-wish-to_SECVPFதிரைப்பட கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்க பிரம்மாண்ட விழா நடத்தப்படும் என இன்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: தமிழக வரலாற்றில் பாரம்பரியமிக்க சட்டசபையில் தமிழ்நாடு முதலமைச்சர் ‘டாக்டர் அம்மா’ இன்று கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டாக மிகப்பெரிய விழா எடுத்து விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒட்டு மொத்த திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது

இந்த விருதுகள் மூலம் பல கலைஞர்கள் தங்களை மேம்படுத்தி கொள்ள ஒரு உந்து சக்தியாக இது இருக்கும். தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அமையவிருக்கும் புதிய கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா தங்கள் பொற்கரங்களால் நிகழவிருக்கும் இதே காலக்கட்டத்தில், இந்த விருது எங்களை போன்ற கலைஞர்களுக்கு இரட்டிப்பு சந்தோசமாக இருக்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries