நடிகையிடம் இருந்து எனது கணவரை மீட்டுத்தாருங்கள்: கமிஷனர் அலுவலகத்தில் பெண் புகார்

201608120954119725_recovery-My-husband-from-the-actress-girl-complained-to_SECVPFசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பெண் கண்ணீருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

சுந்தரா டிராவல்ஸ் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ராதா என்பவர், எனது கணவரை, என்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறார். அவர் மீது ஏற்கனவே மாம்பலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் கொடுத்து உள்ளேன். போலீசார் விசாரணை நடத்தி, ராதாவை எச்சரித்து அனுப்பினார்கள்.

எனது கணவர் நல்லவர். அவரை என்னிடம் இருந்து நடிகை ராதா பிரித்து விடுவாரோ, என்ற பயம் உள்ளது. எனக்கு போனில் அடிக்கடி பேசி, ராதா கொலை மிரட்டல் விடுக்கிறார்.

எனது கணவரை, என்னிடம் பத்திரமாக மீட்டுத்தர வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதா, தன் மீது கூறப்பட்ட புகாரை மறுத்துள்ளார். ஏற்கனவே அவர் தொழில் அதிபர் ஒருவர் மீது புகார் மனு கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries