கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கேரளா செல்லும் விஜய்

201608131913033367_vijay-met-sub-collector-umesh-kesavan_SECVPFகேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் துணை கலெக்டராக இருப்பவர் உமேஷ் கேசவன். சமீபத்தில் இவர் பணி புரியும் பகுதியில் உள்ள அட்டப்பாடி என்ற கிராமத்துக்கு சென்றார். அப்போது, அங்குள்ள மக்கள் அடிப்படை வசதி, படிப்பறிவு, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதை அறிந்தார்.

அந்த கிராமத்து மக்களிடம் பேசி பழகிய போது, அங்குள்ள பெரும்பாலான இளைஞர்கள் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருப்பதை தெரிந்துகொண்டார். அந்த கிராமத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அங்கு வாழ்பவர்கள் முன்னேற்றம் அடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று திட்டமிட்ட உமேஷ், இந்தத் தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

உமேஷ் கேசவனின் பதிவு பற்றித் தெரிந்துகொண்ட விஜய் நேற்று ‘விஜய் 60’ படப்பிடிப்பு தளத்துக்கு உமேஷை வரவழைத்து அவருடன் உரையாடியிருக்கிறார்.

சுமார் ஒரு மணி நேரம் இருவரும் உரையாடியதாக படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விரைவில் அட்டப்பாடி கிராமத்திற்கு விஜய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries