பஞ்சதந்திரம் 2: கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் கமல்?

201608131832318129_panchathantiram-2-kamal-again-team-up-with-ksravikumar_SECVPFகமல், ஜெயராம், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், ஸ்ரீமன், யூகிசேது நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘பஞ்சதந்திரம்’. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தை பி.எல்.தேனப்பன் தயாரித்திருந்தார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து வெளியான ‘பஞ்சதந்திரம்’ 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப்பின் இப்படத்தின் 2 வது பாகத்தை உருவாக்கும் முயற்சியில் கமல் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முதல் பாகத்தை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமாரே இரண்டாவது பாகத்தையும் இயக்குவார் என்று கூறப்படுகிறது. முதல் பாதியில் மனைவிகளுக்குத் தெரியாமல் கணவர்கள் சுற்றுலா சென்றதுபோல இரண்டாவது பாதியில் கணவர்களுக்குத் தெரியாமல் மனைவிகள் சுற்றுலா போவது போன்று படத்தின் கதையை அமைத்திருக்கிறார்களாம்.

விரைவில்’பஞ்சதந்திரம் 2’குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online