விஜய் படத்தின் தலைப்பு எங்கள் வீட்டு பிள்ளை இல்லை :படக்குழு விளக்கம்

201608131336006592_title-not-yet-fixed-for-vijay-60_SECVPF‘தெறி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘அழகிய தமிழ்மகன்’ பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.இப்படத்துக்கு தற்காலிகமாக ‘விஜய் 60’ என படக்குழு பெயரிட்டுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், என பாப்ரி கோஷ் 3 நாயகிகளும் முக்கிய வேடங்களில் சதீஷ், மொட்டை ராஜேந்திரன், டேனியல் பாலாஜி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

‘விஜய் 60’ படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்தே ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்று படத்துக்கு பெயர் வைத்திருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்து வெளியான வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘விஜய் 60’ படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது.

இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும்.’எங்கள் வீட்டு பிள்ளை’ என்னும் இத்தலைப்பை சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

இப்படத்துக்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும் ”என்று தெரிவித்துள்ளனர்.

படக்குழுவினரின் இந்த விளக்கத்தால் ‘விஜய் 60’ படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries