கதாநாயகன் இல்லாத படங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்

201608131023519212_actresses-Interest-without-heroes-in-the-films_SECVPFபழைய நடிகைகள் சாவித்திரி, பத்மினி, ஜமுனா, ஜெயப்பிரதா, ஜெயசுதா என்று பலரும் கதாநாயகர்களுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி அவரவர் படங்களில் முத்திரை பதித்தனர். கடைசியாக விஜயசாந்தியும் அதிரடி வேடங்களில் தனித்துவம் காட்டினார்.

அதன்பிறகு நடிகைகளுக்கான முக்கியத்துவம் குறைந்தது. காதல், கவர்ச்சிக்கும் டூயட் பாடல்களுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே படங்களும் வந்தன.

ஆனால் சமீபகாலமாக அதில் மாற்றம் தெரிகிறது. அபார திறமைகளால் கதாநாயகிகள் நிமிர ஆரம்பித்துள்ளனர். அனுஷ்கா நடிப்பில் வந்த அருந்ததி படம் இதற்கு முன் உதாரணமாக அமைந்தது. கதாநாயகன் இல்லாத இந்த படம் ஆந்திராவில் வரலாறு காணாத வசூல் குவித்தது.

அருந்ததியை தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டு தமிழகத்திலும் கோடிகளை அள்ளினார்கள். இது கதாநாயகிகள் பக்கம் டைரக்டர்களையும் தயாரிப்பாளர்களையும் திரும்ப வைத்தது.

குறைவாக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளை முன்னிலைபடுத்தும் கதையம்சத்தில் வரும் பல படங்கள் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகர்களின் படங்களை வசூலில் பின்னுக்கு தள்ளுவது அவர்களை ஆச்சரியப்படுத்தியது.

எனவேதான் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்கள் எடுக்கும் ஆர்வம் திரையுலகினர் மத்தியில் தற்போது ஏற்பட்டு உள்ளது.

கதாநாயகிகளும் காதல் படங்களை ஒதுக்கி விட்டு தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். கதாநாயகன் இல்லாத கதைகளுடன் வரும் டைரக்டர்களிடம் நடிக்க உடனே சம்மதம் சொல்லி விடுகின்றனர்.

அனுஷ்கா அருந்ததிக்கு பிறகு ராணி வேடங்களில் ருத்ரமா தேவி, பாகுபலி, உடல் எடை கூடிய பெண்ணாக இஞ்சி இடுப்பழகி என்று தொடர்ந்து தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாரிப்பில் உள்ள பாக்மதி, ஓம் நமோ வெங்கடேசா படங்களும் அனுஷ்காவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையசம்சம் உள்ள படங்கள்.

நயன்தாராவும் தனது கவர்ச்சி, காதல் இமேஜை மாற்றி விட்டு பேய் வேடத்தில் மாயாவிலும், தீவிரவாத கணவனை குரூரமாக கொலை செய்யும் பெண் வேடத்தில் அனாமிகாவிலும் காது கேளாத பெண்ணாக நானும் ரவுடிதான் படத்திலும் திறமை காட்டினார்.

இந்த படங்கள் வசூல் குவித்தன. டோரா படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

15 வருடமாக காதல், கவர்ச்சி வேடங்களில் நடித்து சலிப்பில் இருந்த திரிஷாவும் கதை தேர்வில் அக்கறை எடுக்கிறார். அரண்மனை-2 படத்தில் பேய் வேடத்தில் மிரட்டினார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான நாயகி படமும் அவர் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்தது. தற்போது தயாராகி வரும் மோகினி படத்திலும் திரிஷாதான் கதையின் நாயகி.

தமன்னாவுக்கு பாகுபலி படம் அதிரடி வேடங்களில் கலக்க முடியும் என்று நிரூபித்தது. அடுத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை டைரக்டர்கள் உருவாக்குகின்றனர்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு இந்தியில் தயாராகும் தேவி படத்திலும் வித்தியாசமாக தோன்றுகிறார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் உருவாகிறது என்று அதில் நடிக்கும் பிரபுதேவாவே கூறி இருக்கிறார்.

பாகுபலி இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். இதுபோல் மேலும் பல கதாநாயகிகளும் கதாநாயகர்கள் இல்லாத படங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online