ரூ.12 லட்சம் மதிப்புள்ள விக்ரம் மகளின் வைர மோதிரத்தை திரும்ப ஒப்படைத்த டாக்ஸி டிரைவர்

201608131516060947_taxi-driver-return-vikram-daughter-diamond-ring_SECVPFதமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், தொழில் அதிபர் சி.கே.ரங்கநாதனின் மகன் ரஞ்சித்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தின் போது, மணமகள் அக்ஷிதாவுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் மணமகன் தரப்பிலிருந்து அணிவிக்கப்பட்டது.

நிச்சயதார்த்தத்துக்குப் பின் கடந்த 2-ந்தேதி, ஆயிரம் விளக்கு காதர்நிவாஸ் ரோட்டில் உள்ள ஐஸ்கிரீம் பார்லருக்கு அக்ஷிதா ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றார். அப்போது அவரது கையில் அணிந்திருந்த வைர மோதிரம் மாயமானது. இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.

மாயமான மோதிரம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் லட்சுமணன்(36) காணாமல் வைர மோதிரத்தை விக்ரம் குடும்பத்தாரிடம் நேரில் ஒப்படைத்திருக்கிறார்.

இதனால் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற விக்ரம் குடும்பத்தினர் தங்களின் மனமார்ந்த நன்றியை லட்சுமணனுக்கு தெரிவித்துள்ளனர்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries